ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய மாயந்தி லங்கர்; காரணம் என்ன தெரியுமா..?
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து தான் விலகியதற்கான காரணம் என்ன என்பதை தொகுப்பாளரான மாயந்தி லங்கர் ஓபனாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளருமான மாயந்தி லங்கருக்கு மிகப்பெரும் ரசிகர் படையே உண்டு.
ஐ.பி.எல் தொடர் குறித்தான நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வரும் மாயந்தி லங்கரின் டிரசிங்கிற்கும், அவரது கலகல பேச்சிற்கும் இந்தியா முழுவதும் மிகப்பெரும் ரசிகர் படையே உண்டு. ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரின் போதும் இவரது விதவிதமான டிரஸ்சிங்கும் சமூக வலைதளங்களில் வைரலாகமல் இருக்காது.
டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் இவர், ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஐபிஎல் தொகுப்பாளர்கள் பட்டியலில் மயாந்தி பெயர் இல்லை. இதனால் ரசிகர்கள் மயாந்திக்கு என்ன ஆச்சு ? ஏன் அவர் பெயர் இல்லை ? என கேள்விகளை முன் வைக்க ஆரம்பித்தனர். அத்துடன் தங்கள் வியூங்களையும் பகிர்ந்தனர்.
இந்நிலையில் வியூங்களுக்கும், வதந்திகளுக்கும் மயாந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.