மட்டமாக விளையாடிய பேட்ஸ்மேன்கள்; தனி ஒருவனாக சென்னை அணியின் மானம் காத்துள்ளார் சாம் கர்ரான் !!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்றைய கேப்டன் பொலார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வழக்கத்திற்கு மாறாக இன்றைய போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே மிக மோசமாக விளையாடியது.

சென்னை அணியின் முதல் நான்கு வீரர்களான கெய்க்வாட் (0), டூபிளசிஸ் (1), அம்பத்தி ராயூடு (2), ஜெகதீசன் (0) வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் வெறும் 3 ரன்கள் எடுப்பதற்குள் சென்னை அணி நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து களமிறங்கிய ஜடேஜா (7), தோனி (16), சாஹர் (0) என வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினாலும் இளம் ஆல் ரவுண்டரான சாம் கர்ரான் மட்டும் தனியாக கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடி 47 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் மிகப்பெரும் அசிங்கத்தில் இருந்து தப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டிரண்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.