மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் பொலார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொலார்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான தேவ்தட் படிக்கல் 74 ரன்களும், ஜோஸ் பிலிப்ஸ் 33 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
பெங்களூர் அணிக்கு துவக்கம் சரியாக அமைந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணியின் சீனியர் வீரர்களான விராட் கோஹ்லி (9), டிவில்லியர்ஸ் (15) சிவம் துபே (2) மற்றும் கிரிஸ் மோரிஸ் (4) என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொத்து பெங்களூர் அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.