சென்னையுடன் மல்லுக்கட்ட காத்திருக்கும் மும்பை அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான் !!

இன்று மாலை துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் தொடரின் 12 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் இன்று துவங்குகிறது.

துபாயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ரோஹித் சர்மா;

கடந்த தொடரை போலவே இந்த தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே துவக்க வீரராக களமிறங்க உள்ளார். ரோஹித் சர்மா தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் மும்பை அணி அசால்டாக வெற்றியடையும்.

குண்டன் டி காக்;

ரோஹித் சர்மாவுடன் இணைந்து மும்பை அணியின் விக்கெட் கீப்பரான குவிண்டன் டிகாக் மற்றொரு துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

சூர்யகுமார் யாதவ்;

இந்திய அணியில் இடம் கிடைக்கவிட்டாலும் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், இந்த தொடரிலும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷான்;

மும்பை அணியின் இளம் அதிரடி வீரரான இஷான் கிஷான் நான்காவது இடத்தில் களமிறக்கப்படுவார். இஷான் கிஷான் தனது அதிரடியை இந்த தொடரில் வெளிப்படுத்தும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு கூடுதல் பலமே.

ஹர்திக் பாண்டியா;

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் மீண்டும் பேட்டை கையில் எடுக்க உள்ளார். சமீபத்தில் பெண் குழந்தைக்கு தந்தையான ஹர்திக் பாண்டியா அதே புத்துணர்ச்சியுடன் இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீரன் பொலார்டு;

அதிரடி ஆட்டக்காரரான கீரன் பொலார்டு தனது அதிரடியை தொடரும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

க்ரூணல் பாண்டியா;

ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு கூடுதல் பலமே.

நாதன் கவுட்டர் நைல்;

ஆஸ்திரேலிய வீரரான கவுட்டர் நைல் இந்த தொடரில் மும்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் சாஹர்;

இளம் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹர் இந்த தொடரில் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு கூடுதல் பலமே.

டிரண்ட் பவுல்ட்;

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான டிரண்ட் பவுல்ட் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார், டிரண்ட் பவுல்டின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது.

ஜஸ்ப்ரிட் பும்ராஹ்;

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் வழக்கம் போல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.

Mohamed:

This website uses cookies.