உலகின் தலைசிறந்த அணி நாங்கதான் மும்பை இந்தியன்ஸ் வீரர் பெருமிதம்.
நடந்து முடிந்த 2020க்கான ஐபிஎல் போட்டித் தொடர் அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்றது, இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லியை மிக எளிதாக வெற்றி பெற்றது இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த தொடர்களை விட இந்த வருடத்திற்கான தொடர் பெரும் குழப்பமாகவும், விறுவிறுப்பு இல்லாமலுமே நடந்து முடிந்துள்ளது.
கொரோனா அச்சுறத்தல், ரசிகர்கள் இல்லாத மைதானம், பெரும்பாலான முக்கிய வீரர்கள் விலகல்.. என பல பிரச்சனைகளை கடந்த இந்த தொடர் நடந்து முடிந்தது.
இந்த வருடம் நடந்த ஐபிஎல் டி20 தொடர் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற எந்த அனைவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டும்தான் அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய பின்னர் வர்ணனையாளர் இயான் பிஷப், மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் மற்றும் துணை கேப்டனான கிரன் பொளார்டிடம் அணி வெற்றி குறித்து கேட்டதற்கு, மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் 11 ஆண்டுகள் பங்கேற்று ஐந்து முறை கோப்பை வெற்றி பெற்றுள்ளது. இது அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சந்தோசமான ஒரு விஷயமாகும்.
சர்வதேச அளவில் மும்பை இந்தியன்ஸ் அணி டி20 தொடரில் ஒரு மிகச் சிறந்த அணியாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம்,தொடக்க வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பந்து வீச்சாளர்கள் என ஏராளமானவர்கள் எங்கள் அணியில் உள்ளனர். மேலும் அனைத்து வீரர்களுக்கும் தக்க பேக்கப் வீரர்கள் எங்களது அணியில் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 என மொத்தம் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.