ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய போகும் முன்னாள் வீரர்! இந்தமுறை இவருக்கு வேறு வேலை !
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. மற்றபடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன.
இதில் ஒரே ஒரு முறை கைப்பற்றிய அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. முதன்முதலாக 2000 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் அந்த அணியிடம் இருந்து பெரிதாக எந்த ஒரு செயல்பாடும் இல்லை.தொடர்ந்து கடைசி இடங்களில்தான் ஒவ்வொரு தொடரிலும் இடம்பிடித்து வருகிறது.
சென்ற வருடம் கூட 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமாக விளையாடியது. இத்தனைக்கும் அந்த அணியில் ஸ்டீபன் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோர்ஸ் போன்ற சர்வதேச வீரர்களும் உள்ளூர் திறமையான வீரர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டனா ஷேன் வார்னே அந்த அணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். சர்வதேச நட்சத்திரமான இவர், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு ஆலோசகராக இணையப் போகிறார் என்று அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்த அணியில் பல விதமான பயிற்சியாளர்களும் ஆலோசகர்களும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒரு ஆலோசகராகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.