அடுத்த போட்டியில் களமிறங்கும் இரண்டு முக்கிய வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

அடுத்த போட்டியில் களமிறங்கும் இரண்டு முக்கிய வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் முக்கிய வீரர்களான ரவிசந்திர அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா அகியோர் விளையாடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 10 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே அனைத்து அணி ரசிகர்களாலும் பாராட்டப்படும் அளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணி, இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.

கடந்த தொடர்களை விட இந்த தொடரில் டெல்லி அணி பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சமபலம் கொண்ட அணியாகவே திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே ரபடா, நோர்ட்ஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர். முதல் போட்டியில் அஸ்வின் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார். இசாந்த் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் அவதிப்பட்டார்.

தற்போது இருவரும் உடற்தகுதி பெற்றுள்ளனர். உடற்தகுதி பெற்ற இருவரும் நேற்று வலைப்பயிற்சி மேற்கொண்டனர். இதனால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது. டெல்லி நாளை அபு தாபியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் இருவரும் விளையாடும் பட்சத்தில் அது டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.