டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்கலூர்அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்கலூர் அணியும் , ஸ்ரேயஸ் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்கலூர்அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி அணி மூன்று மாற்றத்துடன் களமிறங்குகிறது. பிரவீன் தூபெ அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்கக்ப்பட்டுள்ளார்.ஹர்ஷல் படேல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானே அணியில் சேர்கக்ப்பட்டுள்ளார் மற்றும் ஹெட்மைர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டேனியல் சாம் அணியில் சேர்கக்ப்பட்டுள்ளார்
அதே போல் பெங்கலூர் அணி இரண்டு மாற்றத்துடன் களமிறங்குகிறது.குகிராத் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்கக்ப்பட்டுள்ளார் மற்றும் சைனி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது அணியில் சேர்கக்ப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டிக்கான பெங்கலூர் அணி;தேவ்தாட் படிக்கள், ஜோஷ் பிலிப்பே,விராட் கோலி(கேப்டன்),ஏபிடிவிலியர்ஸ்(விக்கேட் கீப்பர்),வாசிங்டன் சுந்தர்,குர்கிராத் சிங்,கிரிஸ் மோரிஸ்,இசுரு உதான,முகமது சிராஜ், யுவேந்தர சஹால், ஷபாஸ் அகமது
இன்றைய போட்டிக்கான டெல்லி அணி; ஷிகர் தவான், பிரித்வி ஷா,அஜிங்யா ரஹானெ,ஸ்ரேயஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ்,ஷிம்ரோன் டேனியல் சாம், ககிஷோ ரபாடா,அக்சர் படேல்,ஆர் அஸ்வின், அன்ரிச் நோர்ட்செ