உமேஷ் யாதவிற்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி இது தான் !!

உமேஷ் யாதவிற்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி இது தான்

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த மாதம் 19ம் தேதி துவங்கிய இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆறாவது போட்டியான இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் களமிறங்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கிரிஸ் மோரிஸ் இன்றைய போட்டியில் விளையாடினால் ஜோஸ் பிலிப்ஸ் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியிலும் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

துவக்க வீரர்களாக தேவ்தட் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச்சும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விரா கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகியோரே இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள்.

அதே போல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோருக்கே வாய்ப்பு கிடைக்கும். பந்துவீச்சாளர்கள் வரிசையில் நவ்தீப் சைனி, டேல் ஸ்டைன் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரே இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

தேவ்தட் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஜோஸ் பிலிப்ஸ்/ கிரிஸ் மோரிஸ், வாசிங்டன் சுந்தர், ஷிவம் துபே, நவ்தீப் சைனி, டேல் ஸ்டைன், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ்.

Mohamed:

This website uses cookies.