எண்ட்ரீ கொடுக்கும் மிக முக்கிய வீரர்; இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இது தான்
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
துவக்க வீரர்கள் ( ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் )
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சீனியர் வீரர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் இன்றைய போட்டியில் எண்ட்ரீ கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஸ் பட்லரின் வருகை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை என்பதில் சந்தேகம் இல்லை.
அதே போல் மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வாலுக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஜெய்ஸ்வால் உள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா, ப்ரியம் கார்க் )
சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் காட்டடி அடித்த சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் நான்காவது இடத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும், ஐந்தாவது இடத்தில் ராபின் உத்தப்பாவும், ஆறாவது இடத்தில் இளம் வீரர் ப்ரியம் கார்க்கும் களமிறங்குவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
பந்துவீச்சாளர்கள் (டாம் கர்ரான், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட்)
கடந்த போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் டாம் கர்ரான், ஜோஃப்ரா ஆர்ச்சார், கார்த்திக் தியாகி, உனாட்கட் மற்றும் ஸ்ரேயஸ் கோபால் போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.