ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக சென்னை அணியின் துவக்க வீரரான டூபிளசிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன்பின் வந்த சேன் வாட்சனும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினார்.
இதன்பின் சாம் கர்ரான் 22 ரன்களிலும், அம்பத்தி ராயூடு 13 ரன்களிலும், ஆமை வேகத்தில் விளையாடிய தோனி 28 பந்துகளில் 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். கடைசி நேரத்தில் ஜடேஜா மட்டும் ஒரு சில பவுண்டரிகள் அடித்து 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஸ்ரேயஸ் கோபால் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.