மீண்டும் சென்னை வீரர்களை தரக்குறைவாக பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! வச்சு செய்த சென்னை ரசிகர்கள்!
வர்ணனையாளராக இருந்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அவ்வப்போது தனது விஷமமான பேச்சுக்களை கொட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதற்காக அவர் ஐபிஎல் வர்ணனையாளர் குழுவில் இருந்து கடந்த வருடம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அவருக்கு கொழுப்பு அடங்கவில்லை போலிருக்கிறது.
அவ்வப்போது யாராவது ஒரு வீரரை பார்த்து அவர் தரக்குறைவான வீரர். நான் அணியில் எடுக்கமாட்டேன், இவர் திறமை கிடையாது. அப்படி எல்லாம் பிற்போக்குத்தனமான பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்து 2019ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை பார்த்து, துண்டு துக்கடா வீரர் இவர். இவரையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன். இந்தியா உலகக்கோப்பை அணியில் தெளிவாக இருக்க வேண்டும். ஜடேஜா அந்த அணியில் இருக்கக்கூடாது என்பதுபோல் பேசியிருந்தார்.
அதனை தாண்டி சதா வர்ணனையாளர்கள் மீதும் தனது வன்மத்தை கக்கினார். சகல வர்ணனையாளரான புகழ்பெற்ற ஹர்ஷா போக்லே இவருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நிலைமை பற்றி ஒரு தலைப்பு வந்தது. அப்போது பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்,
ஹர்ஷா போக்லே இதை பார்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியிருந்தால், அந்த அனுபவம் உங்களுக்கு தெரியும். நீங்கள் அதில் ஆடவில்லை. நீங்கள் இதை பற்றி எல்லாம் பேசக்கூடாது என்று வன்மத்தை கக்கினார். இதனையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த, பிசிசிஐ இத்தனை சம்பவங்களுக்குப் பிறகு அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ஆனால் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள முடியாது என்று தடாலடியாக அறிவித்துவிட்டது பிசிசிஐ. இதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் தனது விஷமத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் சஞ்சய். வழக்கமாக மும்பை அணிக்கு சப்போர்ட் செய்யும் இவர், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை போலிருக்கிறது.
இதன் காரணமாக பியூஸ் சாவ்லா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரையும் தரம் குறைந்த வீரர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவில் “பியூஸ் சாவ்லா மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற தரம் குறைந்த வீரர்கள் நன்றாக விளையாடியது பார்க்க நன்றாக இருக்கிறது. சாவ்லா நன்றாக பந்துவீசினார் .5வது மற்றும் 16 வது ஓவரில் நன்றாக அவரது பந்து ஈடுபட்டது. அதேநேரத்தில் ராயுடு நன்றாகவே பேட்டிங் பிடித்தார்” என்று தனது விஷமத்தை உருவாக்கியிருந்தார். இதனை பார்த்த ட்விட்டர்வாசிகள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வைத்து செய்து கொண்டிருக்கின்றனர்.