ஒரே ஐபிஎல் தொடரில் 2 சதங்களும் 2 அரைசதம் அடித்த ஒரே வீரராக நான் தான் இருப்பேன்! ஷிகர் தவான் சிரிப்பு பேச்சு!
டெல்லி அணியின் இடதுகை தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார் அதாவது தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்
13 வருட ஐபிஎல் தொடரில் எந்த ஒரு வீரரும் இப்படிப்பட்ட சாதனையை செய்ததில்லை டெல்லி அணி பெங்களூரு அணிக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இதன் காரணமாக வியாழக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடுகிறது
இந்த போட்டிக்கு முன்னர் அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது நான் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக 500 ரன்களுக்கு மேலாக ஐபிஎல் தொடரில் குறைத்து வருகிறேன் ஒவ்வொரு வருடமும் எனது சிறந்த வருடமாக அமைந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த வருடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஏனெனில் 2 சதங்களும் அடித்திருக்கிறேன் 2 டக் அவுட்டும் ஆகி இருக்கிறேன். இதனை செய்த ஒரே வீரராக நான் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன் தொடர்ந்து அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் இந்த வருடம் எனக்கு நன்றாக அமைத்துவிட்டது தொடர் முழுவதும் நல்ல மனநிலையுடன் தான் ஆடினேன் என்று தெரிவித்திருக்கிறார் ஷிகர் தவான்