புவனேஷ்வர் குமார் விளையாடுவாரா..? அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஹைதராபாத் அணி !!

புவனேஷ்வர் குமார் விளையாடுவாரா..? அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஹைதராபாத் அணி

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய நாளின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

துவக்க வீரர்கள் ( டேவிட் வார்னர், பாரிஸ்டோ )

ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது, வழக்கம் போல் டேவிட் வார்னர் மற்றும் பாரிஸ்டோவே இன்றைய போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவர்.

மிடில் ஆர்டர் ( மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க்)

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருவதால் மிடில் ஆர்டரில் மாற்றம் செய்யும் முடிவை ஹைதராபாத் அணி எடுக்காது என்றே தெரிகிறது. வழங்கம் போல் மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் மற்றும் ப்ரியம் கார்க்கே இன்றைய போட்டியிலும் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள்.

ஆல் ரவுண்டர்கள் (விஜய் சங்கர், அபிசேக் )

கடந்த போட்டியில் 41 ரன்கள் வழங்கிய அப்துல் சமதிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு பதிலாக விஜய் சங்கருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். கடந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் மானம் காத்த அபிசேக்கிற்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும்.

பந்துவீச்சாளர்கள் ( ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், நடராஜன்)

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஹைதராபாத் அணி இன்று ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கலீல் அஹமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சித்தார்த் கவூலுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

Mohamed:

This website uses cookies.