சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஹைதராபாத் அணி இது தான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அதே வேளையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ, 7 போட்டிகளில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய காட்டயத்தில் விளையாடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியிலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரர்களாக பாரிஸ்டோ மற்றும் டேவிட் வார்னரும் இடம்பெறுவார்கள். மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க்கும் இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்களாக விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் சர்மாவும் இடம்பெறுவார்கள்.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோ, மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய் சங்கர், அபிசேக் சர்மா, ரசீத் கான், சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அஹமது.