ஆரம்பத்தில் இருந்தே கொல்கத்தா வீரர்களை அடக்கி வைத்த ஹைதராபாத் வீரர்கள்; வெற்றிக்கு எளிய இலக்கு !!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் 36 ரன்களும், ராகுல் திரிபாதி 23 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இதன் பின் வந்த நிதிஷ் ராணா 29 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியூ ரசல் 11 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதன் பின் கூட்டணி சேர்ந்த கொல்கத்தா அணியின் இந்நாள் கேப்டன் இயன் மோர்கன் – முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி கடைசி நேரத்தில் சிறிது அதிரடியாக விளையாடி ரன் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 163 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதி வரை ஆட்டமிழக்காத தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் விக்கெட்டை இழந்த இயன் மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ரசீத் கான், விஜய் சங்கர் மற்றும் பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.