பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன், ரசீத் கான்; ஹைதராபாத் அணிக்கு சவாலான இலக்கு !!

பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன், ரசீத் கான்; ஹைதராபாத் அணிக்கு சவாலான இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டிகாக் 39 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் (27), இஷான் கிஷன் (31), ஹர்திக் பாண்டியா (28), பொலார்டு (25*) மற்றும் கடைசி ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் 20 குவித்த க்ரூணல் பாண்டியா என மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக சித்தார்த் கவூல் மற்றும் சந்தீப் சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்ளை கைப்பற்றினர். ரசீத் கான் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் இந்த போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன் தான் வீசிய 4 ஓவரில் வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுகொத்தார்.

Mohamed:

This website uses cookies.