கேன் வில்லியம்சனுக்கு இடம் இல்லை… களமிறங்கும் முக்கிய வீரர்; இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணி இது தான் !!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்ட கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக விண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
விண்டீஸ் அணியின் முக்கிய வீரரான ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தனது பங்களிப்பை சரியாகும் செய்து கொடுக்கும் பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஹைதராபாத் அணியில் பெரிதாக வேறு மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், ப்ரியம் கர்க், அபிசேக் சர்மா, ரசீத் கான், கலீல் அஹமத், நடராஜன், அப்துல் சமத்.