மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல் !!

மார்ச் மாதமே துவங்கும் ஐ.பி.எல் தொடர்..? வெளியான ரகசிய தகவல்

உலகளவில் மிகவும் பிரபலமான டி20 லீக்காக ஐபிஎல் திகழ்கிறது. இந்த 10 ஆண்டுகளின் கடைசி தொடரான 2019-ல் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த சீசன் (2020) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடர் தொடங்கும் எனவும், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் எனவும், இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றொரு அணியுடன் விளையாடும் எனவும் முக்கிய நபர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

Kolkata: KKR bowler Piyush Chawla reacts after dimissed Kings XI Punjab batsman Glenn Maxwell during IPL Match at Eden Garden in Kolkata on Wednesday.
PTI Photo by Swapan Mahapatra(PTI5_4_2016_000312B)

ஒருவேளை அந்த நபர் கூறியதுபோல் மார்ச் 29-ந்தேதி தொடங்கினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் கடைசி போட்டி மார்ச் 29-ந்தேதி முடிவடைகிறது. இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31-ந்தேதிதான் முடிவடைகிறது.

முன்னதாக ஐபிஎல் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏப்ரல் 1-ந்தேதி தொடரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.