கேன் வில்லியம்சனுக்கு இடம் இல்லை; ஹைதிராபாத் அணிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான தனது ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதவுடன் நடைபெற்று வரும் இந்த தொடர் குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.பி.எல் தொடர் குறித்தும், ஒவ்வொரு அணியின் பலம், பலவீனங்கள் குறித்தும் பல்வேறு விசயங்களை ஓபனாக பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் மிக முக்கிய வீரரான கேன் வில்லியம்சனுக்கே தனது அணியில் இடம் கொடுக்காத கவாஸ்கர், கேன் வில்லியம்சன் இடத்தில் இளம் வீரர் ப்ரியம் கார்க்கை தேர்வு செய்துள்ளார்.
அதே போல் துவக்க வீரர்களாக டேவிட் வார்னரையும், பாரிஸ்டோவையும் தேர்வு செய்துள்ள கவாஸ்கர், பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரசீத் கான், முகமது நபி, புவனேஷ்வர் குமார், பாசில் தம்பி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
கவாஸ்கர் தேர்வு செய்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்;
டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பாரிஸ்டோவ், மணிஷ் பாண்டே, ப்ரியம் கார்க், விஜய் சங்கர், விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), முகமது நபி, புவனேஷ்வர் குமார், பாசில் தம்பி, ரசீத் கான், சந்தீப் சர்மா.