தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் எடுப்பதற்கு இதுவே சரியான தருணம் என முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
2020 ஐபிஎல் போட்டித் தொடர்களில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ். இவர் 15 போட்டிகளில் 461 ரன்கள் எடுத்துள்ளார். இவரை ஐபிஎல் போட்டியில் மட்டுமில்லாமல் கடந்த இரண்டு வருடம் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய ஸ்டிரைக் ரேட் 135.10.
ஐபிஎல் போட்டிகளில் அனைத்து போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருந்தபோதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரை இந்திய அணிக்கு ஏன் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கௌதம் காம்பீர் சூர்யகுமார் யாதவ் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் சூரியகுமார் ஒரு மிகச்சிறந்த ஃபர்ஸ்ட்-க்ளாஸ் பேட்ஸ்மேன் ஆக திகழ்கிறார். இவரின் ஒவ்வொரு ஷாட்டும் மிகவும் நுணுக்கமாகவும் அதிரடியாக உள்ளது என்று புகழ்ந்துள்ளார்.
இவர் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான அனைத்து தகுதியும் இவரிடம் உள்ளது என்று சூரியகுமாரி புகழ்ந்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியில் இருந்த போது அவை சரியாக பயன்படுத்தவில்லை. பின் மும்பையில் இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் தனது அபாரமான திறமை வெளிப்படுத்தினார். கொல்கத்தாவிற்கு சூரியகுமார் இல்லாதது பெறிய இழப்பாகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் பலமாக அமைந்தது என்றும் அவர் கூறினார்