ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை அறிவிப்பு முதல் போட்டி யார் யாருக்கு?
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இத்தனை நாட்களாக இந்த இரண்டு அணிகள் மோதும் என்று கருதப்பட்டு வந்தது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல பிரச்சினைகளில் இருந்து வந்ததால் இந்த கருத்து நிலவுகின்றது.
இந்நிலையில் இன்று சொன்னபடியே ஐபிஎல் ஷெட்யுல் முழு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே அபுதாபி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துவங்குகிறது.
செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10-ஆம் தேதி கடைசி போட்டி நடைபெற்று முடிகிறது. எல்லா போட்டிகளும் 7.30 மணிக்கு தான் துவங்குகிறது. ஒரு சில போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்கள் மட்டுமே இதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
அனைத்து அணிகளும் வழக்கம் போல் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும். குரூப் ஸ்டேஜ் பிரிவில் 14 போட்டிகளில் அதன் பின்னர் வழக்கம்போல் பிளே ஆப் சுற்று செமி பைனல் சுற்று இறுதிப் போட்டி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்காது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக நடைபெறும் என்று நடத்தி காட்டப் போகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் இந்த அணிதான் வழக்கம்போல் மும்பை அணியுடன் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.