2020 ஐபிஎல் போட்டி தொடர் துபாய் அமீரகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது லீக் சுற்று முடிவடைந்த நிலையில் டெல்லி, பெங்களுர், ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் ப்ளே ஆஃப் தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரி்கெட் ஜாம்பவனான் விரேந்தேர் சேவாக் பெங்களூர் அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருந்தபோதும் விராட் கோலி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
2020 ஐபிஎல் போட்டி தொடரில் 14 போட்டியில் பங்கேற்று 460 ரன்கள் அடித்து அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். அப்படி இருந்தும்அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 122 ஆகவே உள்ளது.
டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்காதது. அதில் கோலி 24 பந்துகள் சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மந்தமான ஆட்டம் ஆர்சிபி அணி ஸ்கோரை 152 என நிர்ணயித்து. இந்த எளிதான இலக்கை மிக எளிமையாக டெல்லி கேப்பிடல் அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா மற்றும் ஆர்சிபி இரு அணிகளில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
வருகிற 6ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் இதே நிலைமை நீடித்தால் அணிக்கு பெரும் நெருக்கடியாக திகழும். அந்த போட்டியில் விராட் கோலி 40 பந்துகளில் 70 அல்லது 80 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணியின் வெற்றிக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது இதில் மிடில் ஓவர்களில் கவனத்துடன் செயல்பட்டு அதிக ரன்களை சேர்க்க வேண்டும் என்றும் சேவாக் அறிவுறுத்தியுள்ளார்