தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !!

ஐபிஎல் போட்டியின் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் சென்னை அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2021 ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரின் இடத்தை பூர்த்தி செய்து சென்னை அணியை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை சீனியர் வீரர்களின் மோசமான செயல்பாட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியது. இந்நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்று சென்னை அணி முழு முனைப்போடு காத்துக்கொண்டிருக்கிறது

இதனை அடுத்து சென்னை அணியிலிருந்து அந்த அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய தகுதியான மூன்று நபர்களை கிரிக்கெட் வல்லுநர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

1 ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியின் முன்னணி வீரரும் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் முக்கிய வீரராவார். இவர் உதவியோடு சென்னை அணி பல முறை வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிக சிறப்பாக செயல்படும் ரவீந்திர ஜடேஜா, தோனிக்கு பதிலாக சென்னை அணியை வழிநடத்துவதற்கு தகுதியான வீரராவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஷர்துல் தாகூர்

சமீபமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அனைத்து போட்டியிலும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பலமுறை வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துள் தாகூர் சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.மேலும் இவருடைய திறமையான பந்து வீச்சின் மூலம் சென்னையில் பல முறை வெற்றியை தழுவியுள்ளது.இந்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு பதில் சென்னை அணியை வழிநடத்த கூடிய தகுதி இவரிடம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ருத்ராஜ் கெய்க்வாட்

தனது திறமையை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது, இதில் மிக சிறப்பாக விளையாடிய கெய்க்வாட், சென்னை அணிக்காக தான் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.அதேபோன்று சமீபமாக நடந்த விஜய் ஹசாரே போட்டியிலும் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் இளம் வீரரான கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.