1 கேன் வில்லியம்சன்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் முக்கியமான வீரராக திகழும் கேன் வில்லியம்சன் தனது அதிரடியான பேட்டிங் கால் ஹைதராபாத் அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பங்குபெற இருப்பதால் இவர் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியிலேயே செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தனது சொந்த அணியை வழிநடத்தி உலக டெஸ்ட் கோப்பையை வெல்வதற்கான பயிற்சியை மேற்கொள்வதால் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியிலேயே சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி ஜூன் மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
2.டிரென்ட் போல்ட்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் டிரென்ட் போல்ட் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 14 போட்டிகளில் பங்கேற்று 25 விக்கெட்களை வீழ்த்தினார் மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்கா இல்லாத குறையை தீர்க்கும் இவர் இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை தனது சொந்த அணியான நியூசிலாந்து அணியின் தலைவராக இருப்பதால் இவர் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 கைல் ஜேம்சன்
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜேம்சன் 2021 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 15 கோடி ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உலக டெஸ்ட் கோப்பைக்கான நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டி நடைபெறுவதால் தனது சொந்த அணியான நியூசிலாந்துக்கு அனைத்து விளையாடுவதற்காக இவர் 2021 ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியிலேயே சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 முஸ்தபிசுர் ரஹ்மான்
பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டி தொடரை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை விட தனது சொந்த அணிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று இதற்கு முன் கூறியிருந்த இவர் ஐபிஎல் போட்டியில் பாதியோடு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.ககிசோ ரபடா
டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அகதிகளும் சவுத்ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ககிசோ ரபடா முதல் சில வாரங்களுக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியும் ஐந்து டி20 போட்டியில் விளையாட முடிவெடுத்து இருக்கிறது. அதன் கடைசி போட்டியானது ஏப்ரல் 16 இல் நிறைவு பெறுவது அதுவரை டெல்லி கேப்பிடல் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.