ஜோஃப்ரா ஆர்சரின் இடத்தில் களமிறங்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்ருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக இவர் முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் பங்கெடுக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜோஃப்ரா ஆர்ச்சர்  பலமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறார்.இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் இவரிடத்தை எந்த வீரர் பூர்த்தி செய்வார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.கிரிக்கெட் போட்டியை பொருத்தமட்டில் ஒரு வீரர் போனால் அவருக்கு பதில் பல வீரர்கள் இருப்பார்கள் என்று கூறுவார்கள், அதேபோன்று ஜோஃப்ரா ஆர்ச்சர் இன் இடத்தை பூர்த்தி செய்வதற்கு தகுதியான 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

ஜேசன் பெஹ்ரண்ட்டார்ஃப்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் சமீபமாக நடைபெற்ற பிக்பாஸ் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் இவருடைய உயரம் மற்றும் வேகம் பந்தை பவுன்ஸ் செய்வதற்கு மிக உதவியாக இருக்கிறது, இதனால் இவர் ஜோஃப்ரா ஆர்ச்சர்க்கு பதில் ஒரு சிறந்த தீர்வாக அமையலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பில்லி ஸ்டேன்லேக்

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான பில்லி ஆஸ்திரேலிய அணிக்காக 19 t20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 6 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்களை வில்தியுள்ளார். மிகவும் வேகமாக பந்து வீச கூடிய பில்லியை ஆர்சருக்கு பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மிச்சல் மிக்லேங்கன்

நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிச்சல் 29 t20 போட்டிகளில் பங்கேற்று 30 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் போட்டிகளில் 56 போட்டிகளில் பங்கேற்று 71 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயன்படுத்திக்கொண்டால் அந்த அணிக்கு மிகப் பெரும் பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒசென் தாமஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தாமஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 டி20 போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.24 வயதாகும் இளம் வீரரான தாமஸ் ஆர்சருக்குக்கு பதில் ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

செல்டன் காற்றெள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் செல்டன் காற்றெள் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார், இவர் விக்கெட் எடுத்த பிறகு பேட்ஸ்மென்களை சல்யூட் அடித்து வழி அனுப்பி வைத்து கொண்டாடுவர், நியூ பாலில் மிகச்சிறப்பாக பந்து வீசக்கூடியதில் வல்லவராக திகழும் செல்டன் ஜோஃப்ரா ஆர்சருக்கு பதில் தேர்வு செய்யப்பட்டால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பலமாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Mohamed:

This website uses cookies.