இரண்டு முறை டைட்டில் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி. கடந்தாண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.அந்த அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தபோதும் அந்த அணி கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் தலைமை இடையில் மாற்றியது தான் என்று பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த அணியில் இருந்து கிறிஸ் கிரீன், சித்தார்த், டாம் பென்டன் போன்ற பல வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதன்காரனமாக அந்த அணிக்கு ஒரு சிறந்த துவக்க வீரர் மற்றும் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறது இதற்காக அந்த அணி 3 வீரர்களை டார்கெட் செய்துள்ளது.
1.அலெக்ஸ் கேரி
ஆஸ்திரெலிய அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி டெல்லி அணிக்கக 3 போட்டிகளில் பங்கேற்று 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் டெல்லி அணியிலிருந்து கைவிடப்படார். 2020-2021 பிபிஎல் போட்டி அடிலைட் ரைடர்ஸ் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 13 போட்டிகளில் பங்கேற்று 425 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அதில் ஒரு சதம் இரண்டு அரை சதமும் அடங்கும்.
அந்த போட்டியில் அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.இடது கை பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி லிமிடெட் ஓவர் போட்டி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில் 2021 க்கான ஐபிஎல் போட்டியில் இவர் கொல்கத்தா அணிக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.ஷிவம் துபே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்தாண்டு எதிர்பாராதவிதமாக அந்த அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதனால் கொல்கத்தா அணி மற்றுமொரு ஆல்ரவுண்டரை தேர்வு செய்ய உள்ளது.சமீபமாக நடந்த முஷ்டாக் அலி போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய ஷிவம் துபே 5 போட்டிகளில் பங்கேற்று 161 ரன்களை எடுத்தார். மேலும் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர் 11 போட்டிகளில் பங்கெடுத்து 129 ரன்கள் மற்றும் நான்கு விக்கெட்கள் மட்டுமே எடுத்தார் இவரின் இந்த மொசமான செயல்பாட்டால் பெங்களூர் அணி இதுவரை அணியிலிருந்து நீக்கியது. மீண்டும் தனது பார்மை நிருபித்த துபே 2021 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3.முஜிபுர் ரஹ்மான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரேன், வருன் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் இதில் வருன் சக்கரவர்த்தி தவிர கடந்த ஆண்டு இரு வீரர்களும் மிகவும் மோசமாக தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அந்த அணிக்கு ஒரு பேக்கப் வீரராக மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 132 டி20 போட்டிகளில் பங்கேற்று 145 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஐபிஎல் போட்டிகளில் 18 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.