மூன்று முக்கிய வீரர்களுக்கு குறி வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி; யார் யார் தெரியுமா..?


ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐந்துமுறை டைட்டில் பட்டத்தை வென்று எந்த ஒரு ஆணியும் செய்திராத சாதனை செய்துள்ளது. அந்த அணியில் முக்கியமான வீரர்கள் பலரும் உள்ளனர். இந்நிலையில் 2020 மும்பை அணி லசித் மலிங்க, ஜேம்ஸ்பாண்டின் போன்ற பல வீரர்களை அணியில் இருந்து நீக்கியது, இதன் காரணமாக அந்த அணிக்கு பேக்கப் வீரர்கள் நிச்சயம் தேவைப்படும் என்ற நிலையில் மும்பை அணி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணிக்கு தேர்வு செய்ய உள்ளது.


1.விஷ்ணு சோலங்கி.


முஷ்டாக் அலி போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய விஷ்ணு சோலங்கி சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் இவர் அருமையாக செயல்பட்டு 71 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். கடைசி மூன்று பந்தில் 6,4 மற்றும் 6 ரன்கள் அடித்து எதிர்பாராத வெற்றியை அந்த அணிக்கு வாங்கித்தந்தார்.


28 வயதாகும் விஷ்ணு சோலங்கி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்கவில்லை, இந்நிலையில் 2021 க்கான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2.ஜலஜ் சக்சேனா


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கனவே ஸ்பின்னராக ராகுல் சஹார் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2020 ஐபிஎல் போட்டியில் 15 போட்டியில் பங்கேற்று 15 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் அவருக்கு ஒரு பேக்கப் வீரராக மற்றுமொரு ஸ்பின்னர் தேவைப்படுகிறது. இந்நிலையில் சக்சேனா ஒரு நல்ல தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஷ்தாக் அலி போட்டியில் இவர் 5 போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லி ஸ்டன்லேக்


மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் நீக்கப்பட்டனர் குறிப்பாக மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க, நாதன் கொல்டர் நைல் மற்றும் ஜேம்ஸ் பட்டின்சன் போன்ற முக்கியமான வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்தாண்டு ஐதராபாத் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2021 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Mohamed:

This website uses cookies.