ஆஸ்திரேலிய வீரருக்காக அடித்து கொள்ள காத்திருக்கும் மூன்று வீரர்கள் !!


ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியை எடுப்பதற்கு மூன்றறிவு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி டெல்லி அணிக்காக 3 போட்டிகளில் பங்கேற்று 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் டெல்லி அணியிலிருந்து கைவிடப்படார். 2020-2021 பிபிஎல் போட்டி அடிலைட் ரைடர்ஸ்க்காக களமிறங்கிய அலெக்ஸ் கேரி 13 போட்டிகளில் பங்கேற்று 425 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அதில் ஒரு சதம் இரண்டு அரை சதமும் அடங்கும்.

அந்த போட்டியில் அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.இடது கை பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி லிமிடெட் ஓவர் போட்டி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில் 2021 கான ஐபிஎல் போட்டியில் மூன்று அணிகள் இவரை தனது அணியில் சேர்க்க போராடி வருகிறது.


1. டெல்லி கேப்பிடல்ஸ்
2020 ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய கேரி சிறப்பாக செயல்படாததால் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தபோதும் 2021 ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு பேக்கப் விக்கெட் கீப்பர் மற்றும் ஒரு சிறந்த துவக்க வீரர் தேவைப்படுகிறது, இந்நிலையில் அலெக்ஸ் கேரி டெல்லி கேப்பிடல் அணிக்கு மீண்டும் தேர்வானால் அந்த அணி பலம் பெறும்.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தெரிவித்ததாவது, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேரி மீண்டும் டெல்லி அணிக்கு திரும்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.


2.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்


பெங்களூர் அணி ஏற்கனவே ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் பிலிப்பே ஆகிய இரு வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர். இருந்தபோதும் அந்த அணி அனுபவம் வாய்ந்த துவக்க வீரரான ஆரோன் பின்ஞ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக அலெக்ஸ் கேரி அந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னும் பெங்களூர் அணிக்கு 3 வீரர்கள் தேவைப்படும் நிலையில் கேரியை தேர்ந்தெடுப்பது மிக புத்திசாலித்தனமான ஒரு யோசனையாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.


3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
கொல்கத்தா அணி இரண்டு வீரர்களுக்கான இடம் இன்னும் மீதம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொல்கத்தா அணியில் சுப்மன் கில்லை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு வீரரும் துவக்க வீரராக செயல்படவில்லை. இந்நிலையில் கில்லுக்கு ஜோடியாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.