இங்கிலாந்து அணியை சார்ந்த 32 வயதான அலெக்ஸ் ஹேல்ஸை தேர்ந்தெடுக்க மூன்று அணிகள் போட்டி போட்டுக் கொண்டுள்ளது.
2019 உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப்பொருள் பயன்பாடு காரனமாக சர்வதேச போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டார். இவர் 2019க்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கெடுக்கவில்லை. இருந்தபோதும் லீக் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்,
2020-2021 பிபிஎல் போட்டியில் இவர் அதிரடியாக விளையாடி 14 போட்டிகளில் பங்கேற்று 535 ரன்கள் எடுத்தார் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163.60 ஆகும், அதில் ஒரு சதமும் மூன்று அரை சதமும் அடங்கும்.தொடக்க வீரரான அலெக்ஸ் 2018இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார், 6 போட்டிகளில் பங்கேற்று 148 ரன்கள் அடித்தார். இந்நிலையில் 2021 க்கான ஏழத்தில் இவரை தேர்ந்தெடுக்க மூன்று அணிகள் போட்டி போட்டுக்கொண்டுள்ளது.
1.ராஜஸ்தான் ராயல்ஸ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே தனது அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களை நீக்கிவிட்டது, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்களை ராஜஸ்தான் அணி நீக்கியதால் ராஜஸ்தான் அணிக்கு ஒரு நட்சத்திர வீரர் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் உள்ளது. இதனால் இங்கிலாந்து வீரரான அலெக்ஸ் ஹேல்ஸை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.
ராஜஸ்தான் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மிக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவருக்கு துணையாக அலெக்ஸ் டேர்வு செய்யப்பட்டால் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த அணியாக மாறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
பெங்களூர் அணி தனது அனுபவம் வாய்ந்த துவக்க வீரரான ஆரோன் பின்ச் அணியில் இருந்து நீக்கியது, மேலும் அந்த அணியின் மற்றுமொரு துவக்க வீரராக பார்த்திவ் படேல் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்நிலையில் அந்த அணிக்கு ஒரு சிறந்த துவக்க வீரர் தேவையாக உள்ளது இதனால் அலெக்ஸை பெங்களூர் அணி நிச்சயம் தேர்ந்தெடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அணியில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவர் மட்டும்தான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இவரோடு சேர்ந்து அலேக்ஸும் அந்த அணியில் தேர்வாகும் பட்சத்தில் ஆர்சிபி அணிக்கு அது மிகப்பெரிய சாதகமாக அமையும்.
3.கிங்ஸ் லெவன் பஞ்சாப்
பஞ்சாப் அணியில் ஏற்கனவே அதிரடி துவக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் உள்ளனர் மேலும் அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடுவதற்கு மாயக் அகர்வால் உள்ளார்.
ஆனால் அந்த அணியில் மூன்றாவது பேட்டிங் பொசிஷனில் விளையாடுவதற்கு மற்றுமொரு வீரர் நிச்சயம் தேவைப்படும் என்பதனால் இங்கிலாந்து அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸை பஞ்சாப் அணி தேர்வு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.