2021 கான ஐபிஎல் போட்டி மே மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தனது வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் தனக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொள்ள திட்டம் தீட்டிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ளது.
2020 ஐபிஎல் போட்டியில் முரளி விஜய் மூன்று போட்டிகளில் பங்கேற்று 32 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவரின் இந்த மோசமான செயல்பாட்டால் கடந்த ஆண்டு சென்னை அணியில் இருந்து கைவிடப்பட்ட முரளிவிஜய் யை மூன்று அணிகள் டார்கெட் செய்துள்ளது.
1.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி மொயின் அலி மற்றும் ஆrஓன் பிஞ்சை தனது அணியில் இருந்து நீக்கியது, படிக்கல், விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தாலும் அந்த அணிக்கு துவக்க வீரராக செயல்படுவதற்கு எந்த ஒரு வீரரும் இல்லை.
இந்நிலையில் முரளி விஜய் பெங்களூர் அணிக்கு தேர்வாகும் பட்சத்தில் இவர் துவக்க வீரராக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
.
2020 ஐபிஎல் போட்டி ரோடு அந்த அணியில் இருந்து கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் கைவிடப்பட்டனர், இதன் காரணமாக கொல்கத்தா அணிக்கு மற்றும் ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் இவருக்கு ஜோடியாக மற்றுமொரு துவக்க வீரர் தேவைப்படும் பட்சத்தில் முரளிவிஜய் ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முரளிவிஜய் என் காதல் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணிக்காக 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, பின் மோசமான பார்மால் கைவிடப்பட்ட முரளி விஜய். மீண்டும் சென்னை அணிக்கு தேர்வாவதர்க்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்த நிலையில், சென்னை அணிக்கு பேக்கப் வீரராக ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் தேவைப்படுகிறது.இதனால் முரளிவிஜய், ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் என்.ஜெகதீசன் போன்ற வீரர்களுக்கு பேக்கப் வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.