இந்த நாளுக்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்; தோனி விக்கெட்டை வீழ்த்திய இளம் வீரர் மகிழ்ச்சி !!

டெல்லி கேப்பிடல் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் எனது கனவு நிறைவேறி விட்டது என்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை நடந்த டெல்லி கேப்பிடல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை டெல்லி கேப்பிடல் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் போல்ட் என்ற முறையில் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 2018 டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டியில் 19வது ஓவரில் தோனியின் விக்கெட்டை எடுத்திருப்பேன். ஆனால் அவர் அடித்த ஃபுல் சாட்டை டெல்லி வீரர் முன்றோ கேட்ச் பிடிக்க தவறிவிட்டார். இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி மிக சிறப்பாக செயல்பட்டு அந்த போட்டியில் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில் தற்பொழுது நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான போட்டியில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தியதால் எனது கனவு நிறைவேறிவிட்டது என்று கூறினார். மேலும் தோனி சமீபகாலமாக விளையாடவில்லை எனவே அவருக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தோம். நெருக்கடியின் உதவியினால் அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடிந்தது என்று ஆவேஷ் கான் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது எனது அணி வெற்றி பெற்றதும் நான் சிறப்பாக செயல்பட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் டுப்லஸ்ஸிஸ் மற்றும் தோனி ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்திய மிகவும் ஆனந்தமாய் உள்ளது. எங்களது அணி தற்போது தரமான நிலையில் உள்ளது என்று ஆவேஷ் கான் தெரிவித்தார்.

மேலும் எங்களது அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் குறிப்பாக ககிசோ ரபடா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பற்பில் நிற தொப்பியை அதிகமான விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் பெற்றார். மேலும் கடந்த தொடரில் மிக வேகமான பந்தை எங்களது அணியின் அன்றிச் நோட்சே வீசி இருந்தார்.அதேபோன்று டெல்லி கேப்பிடல் அணியில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் உள்ளனர் என்று தெரிவித்த அவர் டெல்லி கேப்பிடல் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும்போட்டி உள்ளது என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.