இந்த ஆண்டு நடந்து கொண்டிருந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. கொரோனா காரணமாக வீரர்களின் நலன் கருதி தொடர் பாதியில் நிறுத்தப் போவதாக அறிவித்து இருந்தது. மேலும் அதே போல ஐபிஎல் தொடர் நிச்சயமாக இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தொடரும் என்றும் உறுதி அளித்திருந்தது
அது உறுதி அளித்ததை போலவே செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை மீண்டும் துவங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ தனது சமூக வலைதளங்களில் நாட்களுக்கு முன்னர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
சில வீரர்கள் இன்றி விளையாடப் போகும் ஐபிஎல் அணிகள்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடர இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு இயக்குனர்கள் தங்கள் நாட்டு வீரர்களை நிச்சயமாக இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடரில் விளையாட அனுப்ப மாட்டோம் என்று கூறி இருக்கின்றனர். அவர்களுக்கு தற்போது கால அட்டவணையை சரியாக இருப்பதாலும், அவர்களின் உடல் நலன் கருதி அவர்களுக்கு வேலைச் சுமையை தர விரும்பவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்
.
எனவே பல அணிகள் இந்த நாடுகளிலிருந்து விளையாடும் வீரர்கள் என்று மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. எனவே அனைத்து அணி நிர்வாகங்களும் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறது. நட்சத்திர வீரர்கள் என்று எப்படி மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது என்று பிசிசிஐ’யிடம் கேள்விகளையும் எழுப்பியுள்ளது
மாற்று வீரர்களை களமிறக்க பிசிசிஐ முடிவு
தற்போது வந்த தகவலின் அடிப்படையில் பிசிசிஐ முடிந்த அளவுக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் அதுபோல்தான் கால அட்டவணையை தேர்ந்தெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு மேலும் அந்த வீரர்கள் வந்து பங்கு கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களுக்கு சிறந்த மாற்று வீரர்களை முடிந்தவரை கூடிய விரைவில் தேர்ந்து எடுக்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே பிசிசி திட்டமிட்டபடி மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மிக சிறப்பாக நடத்தி முடிக்கும் என உறுதியாக நாம் நம்பலாம். ஷார்ஜா துபாய் அபுதாபி மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களில் மீதமுள்ள 31 போட்டிகள் திட்டமிட்டபடி மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். எனவே ரசிகர்களும், அணி நிர்வாகங்களும் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் அவசியமில்லை என்று சில சீனியர் உறுப்பினர்கள் தகவல் அளித்துள்ளனர்.