பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட வீராருக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது பஞ்சாப் அணி !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

14வது ஐபிஎல் சீசனின் 4வது போட்டியான இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிரிஸ் மோரிஸ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஸ்வஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆண்ட்ரியூ டை ஆகியோருக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக மனன் வோஹ்ரா மற்றும் சேட்டன் ஷகாரியா ஆகியோர் இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியும் அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. மெரிட்ரித், ரிச்சர்ட்சன், கிரிஸ் கெய்ல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் மாயன்க் அகர்வால், தீபக் ஹூடா, தமிழக வீரர் ஷாருக் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களும் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மாயன்க் அகர்வால், கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மனன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் ப்ராக், சிவம் துபே, ராகுல் திவடியா, கிரிஸ் மோரிஸ், ஸ்ரேயஸ் கோபால், சேட்டன் ஷகாரியா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

Mohamed:

This website uses cookies.