பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. மொய்ன் அலி மற்றும் லுங்கி நிகிடி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இம்ரான் தாஹிர் மற்றும் டூவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணியும் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. சபாஷ் அகமத் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேனியல் கிரிஸ்டியன் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், டூவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;
விராட் கோலி (கேப்டன்), தேவ்தட் படிக்கல், கிளன் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாசிங்டன் சுந்தர், டேனியல் கிரிஸ்டியன், கெய்ல் ஜேமிசன், ஹர்சல் பட்டேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.