ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 14வது சீசன் நேற்று துவங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , பெங்களூர் அணியும் மோதிய நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான சென்னை அணியை பொறுத்தவரையில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
கடந்த தொடரை போன்றே இன்றைய போட்டிக்கான சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்டும், டூபிளசிஸுமே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது.
அதே போல் மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா மற்றும் தோனியும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் ஜடேஜா இன்றைய போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவுடன் டூவைன் பிராவோவும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இடம்பெறுவார். அதே போல் கடந்த தொடரில் சென்னை அணியின் கதாநாயகனாக திகழ்ந்த சாம் கர்ரானும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இம்ரான் தாஹிரும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹரே வழக்கம் போல் விளையாடுவார்கள் என தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.