அஸ்வினுக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற சீனியர் வீரர்; பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி !!

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

14வது ஐபிஎல் சீசனின் 22வது போட்டியான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள ரவிச்சந்திர அஸ்வினுக்கு பதிலாக இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர டெல்லி அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான டெல்லி அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. நவ்தீப் சைனி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராஜட் படிதர் என்னும் இளம் பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜட் படிதர் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என விராட் கோலி அறிவித்துள்ளார். அதே போல் டேனியல் கிரிஸ்டியன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவரது இடத்தில் டேனியல் சம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், சிம்ரன் ஹெய்ட்மர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஸ் கான்.

இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி;

விராட் கோலி, தேவ்தட் படிக்கல், ராஜட் படிக்கர், கிளன் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாசிங்டன் சுந்தர், டேனியல் சம்ஸ், கெய்ல் ஜேமிசன், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

Mohamed:

This website uses cookies.