மொய்ன் அலிக்கு இடம் கிடைக்குமா..? அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் !!

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 25 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று மாலை (30-4-21) நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

அதே போல் நாளை (1-5-21) நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான நாளைய போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், எவ்வித மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான அணியிலும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் வழக்கம் போல் ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோரும், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மொய்ன் அலி, ஜடேஜா மற்றும் சாம் கர்ரான் ஆகியோருக்குமே இடம் கிடைக்கும் என தெரிகிறது.

அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் வழக்கம் போல் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டூபிளசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி நிகிடி.

Mohamed:

This website uses cookies.