கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாட போகும் ஹைதராபாத் அணி இதுதான்!

14வது ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. நடைபெற்ற இரண்டு போட்டிகள் மிகச் சிறந்த போட்டியாக அமைந்துவிட்டது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின கடைசி பந்து வரை யாருக்கு வெற்றி என்று தெரியாமல் பரபரப்பாக சென்றது. 2-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற முடியவில்லையே டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெற்று விட்டது.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் கொல்கத்தா அணிக்கு இயான் மார்கன் கேப்டனாக தலைமையேற்று உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டி. தற்போது ஹைதராபாத் அணி களம் இறக்கப் போகும் 11 வீரர்கள் பற்றி பார்ப்போம். துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்குவார்கள் மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே கேன் வில்லியம்சன் ஆகியோரும் ஆல்-ரவுண்டராக விஜய் சங்கர் மற்றும் அப்துல் சமது ஆகியோர் களம் இறங்குவார்கள்.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி இருக்கிறது இதில் ஹைதராபாத் அணி 7 முறையும் கொல்கத்தா அணி 11 முறையும் வென்று இருக்கின்றன சென்ற வருடம் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது 

நேருக்கு நேர்

புள்ளிவிவரங்கள்போட்டிகளில்எஸ்.ஆர்.எச் கே.கே.ஆர் டிராமுடிவு இல்லை
ஒட்டுமொத்தம்197111 0
ஐ.பி.எல்197111 0
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (செபாக், சென்னை)
கடந்த 5 போட்டிகளில்5221 0
ஐ.பி.எல் 20202011

சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் வேகப்பந்து வீச்சாளராக தமிழகத்தை சேர்ந்த தங்கராஜ் நடராஜன், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோர் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

சாத்தியமான XI: டேவிட் வார்னர் (கே), விருத்திமான் சஹா (கீ), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் / கேதார் ஜாதவ், முகமது நபி, அப்துல் சமத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன்

Prabhu Soundar:

This website uses cookies.