தமிழக வீரர் ஷாருக் கானுக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி இது தான் !!

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

14வது ஐபிஎல் டி.20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் தொடரின் நான்காவது போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே இந்த போட்டி இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை துவங்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தொடரில் மாஸ் காட்டிய கே.எல் ராகுல் மற்றும் மாயன்க் அகர்வாலே இந்த தொடரிலும் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது.

அதே போல் மிடில் ஆர்டரில் கிரிஸ் கெய்ல் களமிறங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த தொடரில் கிரிஸ் கெய்லுக்கு பாதி போட்டியில் வாய்ப்பு கொடுக்காத பஞ்சாப் அணி இந்த தொடரிலும் அதே தவறை செய்யாது என்றே தெரிகிறது. அதே போல் நிக்கோலஸ் பூரனும், சர்பராஸ் கானும், மந்தீப் சிங்கும் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள் என தெரிகிறது.

டி.20 போட்டிகளில் நம்பர் 1 வீரராக இருக்கும் டேவிட் மாலனுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே, கடந்த தொடரில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக விளையாடியுள்ளதால் அவரை அணியில் இருந்து எடுக்கும் முடிவை பஞ்சாப் நிர்வாகம் எடுக்காது என்றே தெரிகிறது. அதே போல் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக் கானுக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. ஷாருக் கானை விட சர்பராஸ் கானுக்கே பஞ்சாப் அணி முன்னுரிமை கொடுக்கும் என தெரிகிறது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் கிரிஸ் ஜோர்டன், ஜெய் ரிச்சர்ட்சன், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் தவித்து வந்த முகமது ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

கே.எல் ராகுல் (கேப்டன்), மாயன்க் அகர்வால், கிரிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், மந்தீப் சிங், சர்பராஸ் கான், கிரிஸ் ஜோர்டன், ஜெய் ரிச்சர்ட்சன், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், முகமது ஷமி.

Mohamed:

This website uses cookies.