இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாக விளையாடியதற்கு மொயின் அலி ஒரு முக்கிய காரணம்
இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி அற்புதமாக விளையாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் மொயின் அல என்று இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியிருக்கிறார்.
பாதி ஐபிஎல் போட்டிகள் நடந்து தற்போது ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த வரை மொத்த அணிகளில் மிக பலம் வாய்ந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்ந்தது. அது விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது. அதுவும் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அனைத்து அணிகளையும் ஆச்சரியப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.
நல்ல பார்மில் இருந்த மொயின் அலி
நடந்த ஐபிஎல் தொடரில் மொயின் அலி சென்னை அணிக்காக மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடினார் இதில் பேட்டிங்கில் 206 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது பேட்டிங் அவரேஜ் 34.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 157.25 ஆகும். அதேசமயம் பவுலிங்கில் மிக அற்புதமாக செயல்பட்ட மொயின் அலி மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த தொடரில் அவரது பவுலிங் எக்கானமி 7 க்கும் குறைவாக இருந்தது.
மொயின் அலி டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராட்சம் ஆகியோருக்கு துணைநின்று சென்னை அணிக்காக சிறப்பான தொடக்கத்தை தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அமைத்துக் கொடுத்தார். மிக அற்புதமாக பேட்டை சுழற்றிய விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.
மகேந்திர சிங் தோனியின் ராஜ தந்திரம்
மேலும் பேசிய பார்த்தீவ் பட்டேல், மொயின் அலி நிச்சயமாக கீழே இறங்கி தான் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை மூன்றாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி விளையாட வைத்தார். சென்னை அணிக்கு காலகாலமாக மூன்றாவது இடத்தில் விளையாடும் வீரர் சுரேஷ் ரெய்னா ஆனால் அவரை விளையாட வைக்காமல் மொயின் அலியை விளையாட வைத்தது மகேந்திர சிங் தோனியின் ராஜதந்திரத்தை விளக்குகிறது.
அதேசமயம் அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தனக்கு முன்னால் அனுப்பி விளையாட வைத்த விதம் ஆச்சரியமாக இருந்தது. கண்டிப்பாக மகேந்திர சிங் தோனி தான் முன்னே இறங்கி விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மகேந்திர சிங் தோனி இவர்கள் இருவரை முன்னே அனுப்பி விளையாட வைத்தார்
இவர்கள் இருவரை அதிக நேரம் விளையாட வைத்து அதன் மூலம் இவர்கள் இருவரையும் அதிக ரன்கள் குவிக்க வைத்ததில் மகேந்திர சிங் தோனியின் திட்டம் பலித்தது. தான் முன்னே இறங்கி விளையாடுவதை விட இவர்கள் இருவரை தனக்கு முன்னரே அவர் விளையாட வைத்த விதம் இரண்டு போட்டிகளில் நன்றாகவே தெரிந்தது. அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அரைசதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய பார்த்தீவ் பட்டேல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே சென்னை அணி கண்டிப்பாக முதல் நான்கு இடங்களில் வந்து நிற்கும் என்று நான் கணித்தேன். நானும் கணிப்பு அதைப்போலவே சென்னை அணி முதல் நான்கு இடங்களில் வந்து நின்றது. சென்னை அணியை மகேந்திர சிங் மிக சிறப்பாக வழிநடத்தினார் அதன் காரணமாகவே சென்னை அணியால் தொடர் வெற்றிகளை குவிக்க முடிந்தது என மகேந்திர சிங் தோனியை பார்த்தீவ் பட்டேல் புகழ்ந்து கூறியுள்ளார்