பெங்களூரு அணி ஒருவேளை தப்பு செய்து விட்டதோ; சந்தேகத்தை கிளப்பும் பார்த்திவ் பட்டேல் !!

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. 

இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் 8 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தங்களது முதல் போட்டிகளில் விளையாட இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் வீரர்களை தயார்படுத்தி வருகிறது, இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது ஆனால் மும்பை அணியில் அந்த அளவு மாற்றம் எதுவும் இருக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆகிய இரு அணிகளிலும் விளையாடியுள்ளார். இவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நான் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளது ஆனால் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் பதில் அளிப்பார்கள் என்று கூற முடியாது என்று தெரிவித்திருந்தார்.

முதலாவது இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி யை ஏன் பெங்களூரு அணி விடுவித்தது, அவர் இருந்திருந்தால் ஆடும் லெவன் வேறு விதமாக அமைந்திருக்கும் என்று தெரிவித்தார். நிச்சயம் ஒரு வீரரால் அணியின் நிலைமை மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.மேலும் பெங்களூர் அணி விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவருமே சார்ந்துள்ளது இந்த இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் வெற்றி பெறுவதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது அந்த அணியின் உட்கட்டமைப்பு பொறுத்துதான் அமையும் என்று தெரிவித்தார்.

கடந்தாண்டு பெங்களூர் அணியில் விளையாடிய மெயின் அலியை அந்த அணி விடுவித்தது, இதனால் 2021 ஐபிஎல் போட்டியில் ஏழுகோடி ஏலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.