14வது ஐபிஎல் தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. நடைபெற்ற இரண்டு போட்டிகள் மிகச் சிறந்த போட்டியாக அமைந்துவிட்டது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின கடைசி பந்து வரை யாருக்கு வெற்றி என்று தெரியாமல் பரபரப்பாக சென்றது. 2-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற முடியவில்லையே டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெற்று விட்டது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 3வது போட்டி இன்று கோலமாக துவங்க உள்ளது.
இந்நிலையில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த தொடரில் மிகச் சிறந்த அணியாக வலம்வரும், மேலும் அந்த அணி கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி எதிர்பாராதவிதமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது, ஆனால் எப்படியாவது இந்த முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள இந்த போட்டி பார்ப்பதற்கே மிகவும் ஆரவாரமாக அமையும் என்று கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏன் ஒரு மிகச் சிறந்த அணியாக இருக்கிறது என்று தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னணி வீரரான ரஷித் கான் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் .
அதில் அவர் கூறியதாவது, நாங்கள் எங்களுக்கு என்று ஒரு தனி இலக்கை எல்லாம் வைக்க மாட்டோம், எங்களுடைய முக்கிய குறிக்கோளே அன்றைய நடக்க உள்ள போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவதுதான். ஒருவேளை நாம் இலக்கை நிர்ணயித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம் என்றால் அது நம்முடைய விளையாட்டை பாதிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் எங்களது அணியில் ஒருவருக்கொருவர் உதவி கொள்வோம் இதனால் மற்றவர்களின் வேலை மிகவும் எளிதாகி விடும். டேவிட் வார்னர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார், மேலும் குறிப்பாக சந்திப், நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் விக்கெட்களை வீழ்த்தி விடுவார்கள் இது என்னுடைய வேலையை மிகவும் எளிதாகி விடும் என்று ரஷித் கான் தெரிவித்தார்.