கடந்த மார்ச் 23 இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரருக்கு பில்டிங் செய்யும்பொழுது தோள்பட்டையில் பலமான காயம் ஏற்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்த மருத்துவ குழுவினர் சுரேஷ் ஐயரால் நான்கு முதல் ஐந்து மாதங்கள் விளையாட முடியாது என்று தெரிவித்து விட்டனர் இதனால் இவர் வருகிற 2021 க்கான ஐபிஎல் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போய்விட்டது.
டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு இல்லாததால் அந்த அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் முக்கிய வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், ஷிகர் தவான், அஜிங்கிய ரஹானே போன்ற இந்திய வீரர்களும் மார்க்க ஸ்டாய்நிஸ் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.
இந்நிலையில் அனைவர் மனதிலும், சமீபமாக கலக்கிக்கொண்டு இருக்கக்கூடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் நினைவில் வந்திருக்கும், ஆனால் இதுகுறித்து டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்ததாவது ரிஷப் பண்டிர்க்கு ஒரு அணியை வழி நடத்துவதற்கான தகுதி அந்த அளவிற்கு கிடையாது எனவே நிச்சயம் அவர் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணி நிர்வாகம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் உடன் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியது.இந்நிலையில் அந்த அணிக்கு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே தலைமை ஏற்று வழி நடத்திய ஒரு வீரர் உங்களில் எவரேனும் ஒருவராகத்தான் இருப்பார் என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ஆண்டுகள் கேப்டனாக இருந்து வழி நடத்தியுள்ளார், அதேபோன்று அஜிங்கிய ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி உள்ளார்.மேலும் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழிநடத்தி உள்ள அனுபவம் உள்ளது,இறுதியாக கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத போட்டிகளில் ஷிகர் தவான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழி நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர்களில் எவரேனும் ஒருவர் தான் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.