இந்த வீரர் மீண்டும் வந்தால் பெங்களூரு அணி வேற லெவல்; ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் பிராட் ஹாக் உறுதி !!

நேற்று நடந்த 2021 கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தனது திட்டத்தின்படி மிகச் சிறப்பாக செயல்பட்ட பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை கலங்கடித்தது கிரிஸ்லின், சூர்யகுமார் யாதவ், மற்றும் இஷான் கிஷன் போன்ற மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை தவிர மற்ற எந்த ஒரு வீரரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இவர்களின் உதவியால் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

160 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விராட் கோலி களமிறங்கினார், ஆனால் இதில் வாசிங்டன் சுந்தர் மற்றும் அதனை தொடர்ந்து களமிறங்கிய படிதார் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்நிலையில் விராட் கோலி 33 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்படாமல் உறங்கிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல் நேற்று மிக சிறப்பாக செயல்பட்டு 39 ரன்களை அடித்தார், வழக்கம்போல் ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிரடியான விளையாடி 48 ரன்கள் அடித்து எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்தார் இந்நிலையில் கடைசி பந்தில் பெங்களூரு அணி திரில்லிங் வெற்றி பெற்றது.

அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 5 விக்கெட்களை வீழ்த்திய பெங்களூரு அணியின் வீரர் ஹர்ஷல் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பல கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களது கருத்தை தெரிவித்து கொள்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரு அணியை பாராட்டியிருந்தார் அதில் அவர் கூறியிருந்ததாவது, மும்பை அணி தோற்றது எதிர்பாராத ஒன்று ஆனால் பெங்களூர் அணி சம பலமாக உள்ளது, மேலும் அந்த அணியின் துவக்க வீரர் தேவ்தாத் படிக்கல் அணிக்கு மீண்டும் திரும்பினால் இன்னும் பலம் ஆகும் என்று தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.