பண்றது எல்லாம் பண்ணிட்டு எப்படிடா இப்படி மூஞ்சிய வச்சுக்கிற; க்ரூணல் பாண்டியாவை விளாசி தள்ளும் ரசிகர்கள் !!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சம்பந்தமே இல்லாமல் ஆக்ரோஷமாக கத்தி கொண்டே இருந்த மும்பை வீரர் க்ரூணல் பாண்டியா சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

14வது ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி ரன் குவிக்கவும் தவறியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள், போட்டியின் முதல் ஓவரில் இருந்தே மும்பை வீரர்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர். குறிப்பாக மும்பை அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவின் ஓவரை குறி வைத்தே பஞ்சாப் வீரர்கள் ரன் குவிக்க துவங்கினர். க்ரூணல் பாண்டியாவின் ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டதால் செம கடுப்பான க்ரூணல் பாண்டியா சம்பந்தேமே இல்லாமல் இந்த போட்டியில் மிகுந்த ஆக்ரோஷமாக கத்தி கொண்டே இருந்தார்.

தனது மோசமான பந்துகளால் பவுண்டரி கொடுத்ததற்கு எல்லாம் க்ரூணல் பாண்டியா, பீல்டர்களை குறை சொல்லும் வகையில் அவர்களை நோக்கி கத்தி கொண்டே இருந்தார். க்ரூணல் பாண்டியாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

க்ரூணல் பாண்டியா இது போன்ற செயல்களை இனி வரும் போட்டிகளில் செய்யாமல் இருக்க வேண்டும் என கூறும் ரசிகர்கள், இந்த தொடரின் மிக மோசமான ஆட்டக்காரர் க்ரூணல் பாண்டியா தான் எனவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.