ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
இதுவரை ஒருமுறை கூட தனது அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தால் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்த விராட் கோலி பெங்களூர் அணிக்காக ஒரு நார்மல் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் எந்த வீரரை பெங்களூர் அணி கேப்டனாக நியமிக்க என்று யோசித்து வருகிறது.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் தலை சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கும் பெங்களூர் அணி அவர்களில் ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுப்பதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக வாய்ப்புள்ள 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
தினேஷ் கார்த்திக்
தமிழகத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பெங்களூர் அணிக்காக 5.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் மீண்டும் இவரை பெங்களூரு அணி, தனது அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.