2022 தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் சொதப்பும் வீரர்கள் ஒரு சிலருக்கு எதிர்கால இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் மறுக்க படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
அப்படி 2022 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
இஷான் கிஷன்
கடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டதன்மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான இளம் அதிரடி வீரர் இஷான் கிஷன் நடைபெறும் 2022 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 2022 ஐபிஎல் தொடரில் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக இவருக்கு இந்திய அணியிலிருந்து வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.