கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக சமீபமாக இந்தியாவில் நடைபெற்று வந்த 2021 ஐபிஎல் போட்டி தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது இந்த போட்டி நடைபெறுமா?, அல்லது இந்த 2021 போட்டி முற்றிலுமாக நிறுத்தப்படுமா என்று ரசிகர்களிடத்தில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தப் போட்டி இலங்கை, இங்கிலாந்து அல்லது துபாய் அமீரகத்தில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மிகப்பெரும் ஏலம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது கோர் வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும் திட்டங்களை தீட்டி வருகிறது இந்நிலையில் ஒவ்வொரு அணியும் RTM என்ற விதியை பயன்படுத்தி தங்களது அணிக்கு தேவைப்படும் முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் தொடரில் வாய்ப்பு உள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள அனைத்து அணிகளும் பலவிதமான திட்டங்களை தீட்டி வருகின்றது
RTM (Right to Match Card) என்றால் என்ன ?
ஐபிஎல் போட்டித் தொடரில் ஆர் டி எம் என்ற புது வகையான விதி ஒன்று உள்ளது இதனை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் முக்கியமான 5 வீரர்களை எந்த ஒரு அணிக்கும் விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அந்த அணி அதிகம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஆர் டி எம் விதியை பயன்படுத்தி சென்னை அணி தக்கவைத்துக்கொள்ள காத்திருக்கும் 3 வீரர்கள்.
சுரேஷ் ரெய்னா
சின்னத் தல என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னை அணியின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் எதிர்பாராத காரணத்தால் தொடரிலேயே பங்கு கொள்ளவில்லை 2021 ஐபிஎல் போட்டியில் களமிறங்கி இருக்கும் சுரேஷ் ரெய்னா டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்து மாஸ் என்ட்ரி கொடுத்தார் இருந்த போதும் அதனை தொடர்ந்து நடைபெற்ற எந்த ஒரு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை இருந்தபோதும் சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா அசைக்க முடியாத வீரராக திகழ்ந்தவர் இதன் காரணமாக சென்னை அணி இவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2.மொயின் அலி
கடந்த ஆண்டு துபாய் அமீரகத்தில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் சென்னை அணி எதிர்பாராதவிதமாக சுற்றுக்கு கூட செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறியது,இதன் காரணமாக மிக சிறந்த வீரர்களை சென்னை அணி தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக சென்னையில் நடைபெற்ற மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயின் அலி தேர்வு செய்தது.
இவர் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறார்,இவரின் வருகையால் சென்னை அணி மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து போட்டியிலும் மிக சிறப்பாக விளையாடியது இதன் காரணமாக இவரை எக்காரணத்தைக் கொண்டும் சென்னை அணி விட்டுக் கொடுக்காது என்று கிரிக்கெட் வருவார்கள் தெரிவித்துள்ளனர்.
தீபக் சஹார்
சென்னை அணியின் அசைக்க முடியாத முக்கிய வீரராக கற்றுக்கொள்ளும் தீபக் சாஹர் பந்துவீச்சில் தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து வருகிறார் இவரின் திறமையால் பல முறை சென்னை அணி வெற்றியின் பாதையை நோக்கி பயணித்து இருக்கிறது, பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர் சென்னை அணி ஓர் அணியில் உள்ள ஒரு வீரர் ஆவார் இவர் சென்னை அணி விட்டுக் கொடுக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.