ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் டி.20 தொடரின் 15வது ஐபிஎல் சீசன் 26ம் தேதி துவங்குகிறது.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருட தலைமையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் 26ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை துவங்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆல் ரவுண்டரான மொய்ன் அலி முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்ததால், அவரது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ராபின் உத்தப்பா;
கடந்த வருட ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கும் வழிவகுத்த சீனியர் வீரர் ராபின் உத்தப்பாவை, இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஏலத்தில் எடுத்தது. மொய்ன் அலி களமிறக்கப்படும் மூன்றாவது இடம் மிக முக்கியமானது என்பதால், மிடில் ஆர்டரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராபின் உத்தப்பாவை அந்த இடத்தில் களமிறக்க சென்னை அணி திட்டமிட்டிருக்கும் என தெரிகிறது.
ராபின் உத்தப்பா இதுவரை விளையாடியுள்ள 193 போட்டிகளில் 4722 ரன்கள் குவித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் 25 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.